பராசக்தி டீமை டெல்லிக்கு அழைத்த பிரதமர்.. என்ன சொல்ல வருகிறார் மோடி?....
சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் பராசக்தி. இந்த படம் 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, 1937 முதல் 1965 வரை தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி இப்படம் பேசுகிறது. அந்த காலகட்டங்களில் காங்கிரஸ்தான் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்ததால் பராசக்தி திரைப்படம் முழுக்க முழுக்க காங்கிரஸுக்கு எதிரான படமாக பார்க்கப்படுகிறது. எனவே, காங்கிரஸ் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில்தான், பராசக்தி படக்குழுவை டெல்லியில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இதையடுத்து சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆக்யோர் டெல்லி சென்று பிரதமர் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸுக்கு எதிராக படம் சித்தரிப்பதால் பராசக்தி டீமை பிரதமர் மோடி அழைத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் இருக்கும் நிலையில் மோடி பராசக்தி படக்குழுவை அழைத்திருப்பது இது காங்கிரஸுக்கு எதிராகவா?, திமுகவுக்கு ஆதவராகவா? இல்லை தவெகவுக்கு ஆதரவாகவா என்பது தெரியவில்லை. நேற்றுதான் ஜனநாயகனுக்கு ஆதரவகவும், மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்த நிலையில் இன்று பராசக்தி டீமை மோடி அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.