திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Updated : சனி, 10 ஜனவரி 2026 (14:27 IST)

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் பராசக்தி. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா மற்றும் வில்லனாக ரவி மோகன் நடித்திருக்கின்றனர்.
 
60கள் காலகட்டத்தில் இந்தி திணைப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை மையமாக வைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் சுதா கொங்கரா. அதனால் படம் முழுக்க அந்த காலகட்டத்தில் இருக்கும் மாதிரியாகவே படமாக்கி இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இது புரியுமா என்பது சந்தேகம்தான். பெரியவர்கள் இப்போது உள்ள இளைஞர்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்வார்கள்.
 
அதனால் படம் வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இன்றைய ஜென்சி கிட்ஸ்களுக்கு இந்த படம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்பதுதான் இப்போது வந்த தகவல். அவர்களை பொறுத்த வரைக்கும் கமர்சியல், ஆக்சன் இதை மட்டும்தான் அவர்கள் ரசிக்கிறார்கள். ஒருவேளை ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகி இருந்தால் பராசக்தி திரைப்படத்திற்கு ஒரு வலுவான போட்டியாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
 
இந்த நிலையில் ரவி மோகனின் தோழியான  கெனிஷா ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த படம் ரவி மோகனுக்காக மட்டும்தான் ஓடும். அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. அவர்தான் இந்த படத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் பாதியில் அவரைத் தாண்டி படமே இல்லை என பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டேக் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிவகார்த்திகேயனைவிட ரவி மோகனின் நடிப்புதான் பிரமாதமாக இருக்கிறது என்றும் பாராட்டி வருகின்றனர்.