செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜனவரி 2026 (22:40 IST)

அடுத்தது 100 கோடி.. அதான!.. பராசக்தி தயாரிப்பாளரை கலாய்க்கும் விஜய் ஃபேன்ஸ்!...

அடுத்தது 100 கோடி.. அதான!.. பராசக்தி தயாரிப்பாளரை கலாய்க்கும் விஜய் ஃபேன்ஸ்!...
சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 9ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் பராசக்தி. 1960களில் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கருவாக வைத்து இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

விஜயின் ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்களுக்கு கோபம் வந்தது. அதோடு, சிவகார்த்திகேயன் மீது அவர்கள் கோபத்தை காட்ட துவங்கினர். இதை புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் பராசக்தி ஆடியோ லான்ச்சில் இதுபற்றி விளக்கமளித்தார். ஆனால், அவரின் விளக்கத்தை விஜய் ஃபேன்ஸ் ஏற்கவில்லை.

ஒருபக்கம் ஜனநாயகன் படமும் வெளியாகாமல் போனதால் விஜய் ரசிகர்களின் மொத்த கோபமும் பராசக்தி படம் மீது திரும்பியது. எனவே, அப்படத்திற்கு எதிராக எதிர்மறை விமர்சனங்களை அவர்கள் பரப்பினார்கள். ஒருபக்கம், படத்திற்கும் எதிர்மறை விமர்சனங்கள் வந்ததால் படத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை என செய்திகள் வெளியானது. பல தியேட்டர்கள் காத்து வாங்குவதாகவும் வீடியோக்கள் வெளியானது.

ஆனால், முதல் நாள் 27 கோடி வசூல் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம் 2 நாளில் 50 கோடி வசூல் என அறிவித்தது. இதை விஜய் ரசிகர்கள் நம்பவில்லை. எனவே, அடுத்து ‘100 கோடி வசூல்தான’ என நக்கலடித்து வருகிறார்கள். அனேகமாக நாளை 3 நாள் வசூல் கோடி என அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.