திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:36 IST)

கூரியர் பார்சலில் வந்த மிக்ஸி திடீரென வெடித்ததால் பரபரப்பு: ஒருவர் காயம்

parcel
கூரியர் பார்சலில் வந்த மிக்ஸி திடீரென வெடித்ததால் கூரியர் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிக்ஸி பார்சல் ஒன்று வெடித்தது. 
 
இதன் காரணமாக கூரியர் நிறுவன ஊழியரின் கைகால் முகம் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கூறிய அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை பெற்றுள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கூரியர் அலுவலகத்த்ஹில் மின்கசிவு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva