1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (18:24 IST)

ரோஹித் சர்மாவை அடுத்து கே.எல்.ராகுலுக்கும் காயம்: கேப்டன் யார்?

KL rahul
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து கே எல் ராகுல் தலைமையில் தற்போது இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது என்பதும், முதல் டெஸ்டில் 187 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்பதால் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாட மாட்டார் என்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் கேஎல் ராகுல் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் கே.எல்.ராகுலுக்கும் திடீரென காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கேஎல் ராகுல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இந்திய அணியின் கேப்டனாக புஜாரே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran