ஆம் ஆத்மியில் இணைந்தார் மிஸ் இந்தியா: நேர்மையான கட்சி என விமர்சனம்
ஆம் ஆத்மியில் இணைந்தார் மிஸ் இந்தியா:
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர், அரவிந்த் கெஜ்ரிவால் நேர்மையான முதல்வர் என்றும் ஆம் ஆத்மி கட்சி நேர்மையான கட்சி என்றும் விமர்சனம் செய்துள்ளார்
கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் மான்சி சேகல், இவர் சற்றுமுன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான ஆட்சி என்னை மிகவும் கவர்ந்தது என்றும் அவரது கடின உழைப்பின் காரணமாக டெல்லியில் இன்று தூய்மையான ஆட்சி நடந்து வருவதாகவும் தூய்மையான அரசியல் மூலம்தான் நாம் உலகில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் ஆம் ஆத்மி குடும்பம் ஒவ்வொரு நாளும் பெரிதாக வளர்ந்து வருகிறது என்றும் இந்த குடும்பத்தில் மான்சியை வரவேற்கிறேன் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்