செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (07:51 IST)

உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை: கமல் டுவீட்

உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்
 
தமிழகத்தில் ஒரு சில தொகுதிகள் அதிமுகவின் கோட்டை என்றும் சில தொகுதிகள் திமுகவின் கோட்டை என்றும் அந்த தொகுதிகளில் வேறு எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்று உதாரணத்துடன் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். 
 
கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.