ஆம் ஆத்மி அரசின் 6 ஆண்டுகள் நிறைவு: டெல்லியில் கொண்டாட்டம்!

kejriwal
ஆம் ஆத்மி அரசின் 6 ஆண்டுகள் நிறைவு
siva| Last Updated: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:09 IST)
காங்கிரஸ், பாஜக என இரண்டு பெரிய தேசிய கட்சிகளை வென்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கடந்த 1995ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது இந்த நிலையில் டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் கொண்டாட்டம் ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியபோது டெல்லியில் எனது தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தி மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம்

கொரோனா காலத்தில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட சிறப்பாக செயல்பட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :