வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (21:31 IST)

பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மீது செருப்பு வீசி தாக்குதல்…

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட மோதலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மீது செருப்பு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தீயுளது.
 

டெல்லியில் பாஜக அதிகாரத்திலுள்ள மாநகராட்சிகளில் மோசடி நடந்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த திங்களன்று கிழக்கு டெல்லி மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் செருப்பை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மோகினி ஜீன்வால் மற்றும் மனோஜ்குமார் தியாகி ஆகிய ஒருவரும் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.