புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (16:17 IST)

ஏழை குழந்தைகளுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்து: மனதை நெகிழவைத்த அமைச்சரின் செயல்

தீபாவளியை முன்னிட்டு தனது ஏழை குழந்தைகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஜிது பட்வாரி.

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சராக உள்ளவர் ஜிது பட்வாரி. இவர் கடந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ரவு தொகுதியில் நின்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில் தீபாவளி தினத்தன்று ஜிது, இந்தூர் பகுதியிலுள்ள ஏழை குழந்தைகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைத்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் இந்த காலத்தில் இப்படி ஒரு அமைச்சரா என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.