1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (11:35 IST)

முன்னாள் முதல்வரின் ரத்த கசிவு நிறுத்தப்பட்டது..

கேரள முன்னாள் முதல்வருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிசையளித்து வருகின்றனர்.

கேரளாவின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தம், கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தனது 96 ஆவது வயதை நிறைவு செய்தார். கேரளா அரசியல் வரலாற்றில் மிகவும் ஆளுமை பெற்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அதன் பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது ரத்த கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ”அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது நரம்பு மண்டலம் தற்போது நிலையாக உள்ளது. தற்போது அவரை நெறுங்கிய உறவினர்கள் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்” என கூறியுள்ளார்.

மேலும் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், அச்சுதானந்தனை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.