தொடர்புடைய செய்திகள்
- இந்தியா, ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்.. தேதி அறிவிப்பு..!
- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்: மனதார பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்..!
- சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடைமுறை மாலை 5.44 மணிக்குத் தொடங்கும் - இஸ்ரோ
- 'சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும்' -நடிகர் மாதவன்
- ஹாலிவுட் படத்தை விட கம்மி பட்ஜெட்! சாதனை நாயகன் சந்திரயான் – 3!
கடைசி 4 நிமிடங்கள் முக்கியமானது.. ‘சந்திராயன் 3’ குறித்து விஞ்ஞானிகள் தகவல்..!
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க இருக்கும் நிலையில் நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய கடைசி நான்கு நிமிடங்கள் மிகவும் முக்கியமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடைசி நேரத்தில் தான் சந்திராயன் 2 தோல்வி அடைந்தது என்றும் ஆனால் சந்திராயன் 3 தோல்வி அடைய மிக குறைவான வாய்ப்புகள் தான் இருக்கிறது என்றும் சந்திராயன் 3 அனைத்து சமிக்ஞைளையும் சரியாக அனுப்பி வைக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திராயன் 3 தரையிறங்கும் நேரம் மற்றும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சந்திராயன் 3 தரையிறங்கும் இடம் மிகவும் பாதுகாப்பானது என்றும் எனவே சந்திராயன் 2 போல சந்திராயன் 3 தோல்வி அடைய வாய்ப்பே இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
சந்திராயன் 3 தரை இறங்கினால் அது உலகிலேயே ஒரு சரித்திர சாதனையாக இருக்கும் என்றும் இந்தியா அந்த சரித்திர சாதனைகளை நிச்சயம் படைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
