இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: கமல்ஹாசன் வாழ்த்து..!
இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் கால் வைத்தது போல் இந்தியர்களும் நிலவில் கால் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என உலகநாயகன் கமல்ஹாசன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 விண்கலம் நேற்று நிலவில் தரையிறங்கி சாதனை செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் காலடி எடுத்து வைத்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல், நிலவில் தரை இறங்குவது வரை என்ன ஒரு பயணம். ..
தேசத்தின் பெருமை இஸ்ரோ. நமது விண்வெளி பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கமல்ஹாசன் தனது வாழ்க்கை தெரிவித்துள்ளார்.
Edited by Siva