திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (11:16 IST)

உத்தரபிரதேசமா? அல்லது என்கவுண்டர் பிரதேசமா? மாயாவதி கடும் விமர்சனம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நாளுக்கு நாள் என்கவுண்டர் அதிகரித்து வரும் நிலையில் இது உத்தரப்பிரதேசமா? அல்லது என்கவுண்டர் பிரதேசமா? என பகுஜன் ஜமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது

போலீஸ் காவலில் இருக்கும்போது அதீக் அகமது, அவரது தம்பி அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடூரமான குற்றமாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. மாநில அரசின் செயல்பாடுகளும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது. தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக தெரியவில்லை. உத்தர பிரதேச மாநிலம் ‘என்கவுன்ட்டர் பிரதேச’ மாநிலமாக மாறி வருகிறது. இது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறிய போது, ‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கும்போது நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு வெட்கக்கேடான செயலாகும். நான் இந்தச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். உத்தரப் பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

Edited by Siva