திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:28 IST)

முன்னாள் எம்.பியின் மகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் எம்பி யின் மகன் என்கவுண்டரில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாதி கட்சியின் எம்எல்ஏ ராஜூபால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது உள்ளிட்டோர் குற்றம் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர் 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஆதிக் அகமது மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகிய இருவரும் இன்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
 
அவர்கள் இருவரையும் அதிரடிப்படையை போலீசார் பிடிக்க முயன்ற போது துப்பாக்கியால் சுட்டதாகவும், போலீஸ் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருப்பி சுட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran