1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (08:33 IST)

மகளிர் ஐபிஎல்: இன்று மும்பை-உபி எலிமினேட்டர் சுற்று.. இறுதிக்கு தகுதி பெறுவது எந்த அணி?

women ipl
மகளிர் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏற்கனவே லீக் போட்டிகள் முடிவடைந்து டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ள டெல்லி அணியுடன் மோதும் என்பதும் இறுதி போட்டி வரும் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் உத்தரப்பிரதேச அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் இடம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
 
இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பரபரப்பாக இருக்கும் என்றும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதை அறிய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva