வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:15 IST)

மஞ்சா நூல் கழுத்தில் அறுத்து சிறுவன் பலி!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் காற்றாறியியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 6 வயது சிறுவன்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்கு தன் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஒரு 6 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது, காற்றில் பறந்து வந்த ஒரு மாஞ்சா கயிறு சிறுவனின் கழுத்தை அறுத்ததாகத் தெரிகிறது.

இதில், படுகாயமடைந்த சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.