1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:29 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முருக மடாதிபதி மீது போக்சோ வழக்குப் பதிவு

abuse
கர்நாடக மாநிலத்தில் முருக மடாதிபதி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கர்நாடக  மாநிலம் சித்ரதுர்காவில் முருகடம் ஒன்று உள்ளது., இந்த மடத்திற்குச் சொந்தமான பள்ளி அருகிலுள்ளது. இங்குப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதியும் உள்ளது.

இந்த மடத்தை தலைமை மடாதிபதியான சிவமூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒ இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் அவர்கள்  புகாரளித்துள்ளனர்.

எனவே,  நஜர்பாத் காவல் நிலையத்தில் அந்தச் சேவை அமைப்பில்  நிர்வாகி புகார் அளித்ததன் பேரில், மடாதிபதி,  சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.