1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (18:28 IST)

தண்டவாளம் அருகே இருந்த வெடிகுண்டை எடுத்து விளையாடிய சிறுவன் பலி!

blast
தண்டவாளம் அருகே இருந்த வெடிகுண்டை எடுத்து சிறுவன் விளையாடிய நிலையில் அந்த வெடி குண்டு வெடித்ததால் சிறுவன் உடல் சிதறி பலியான தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அருகில் மற்றொரு வெடி குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா என்ற ரயில் நிலையம் அருகே வெடிகுண்டு ஒன்று கீழே இருந்துள்ளது. அந்த வெடிகுண்டை அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் விளையாட்டு பொருள் என நினைத்து விளையாடிய நிலையில் திடீரென அந்த வெடிகுண்டு வெடித்தது மரணம் அடைந்தார் 
 
சமூகவிரோதிகள் ரயில்வே தண்டவாளத்தை தகர்க்க வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிகிறது. அதனை  அறியாமல் எடுத்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் 
 
மேலும் அதே பகுதியில் மற்றொரு குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran