புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (20:36 IST)

புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதால் அவை வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக மோடி பேசியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக கொண்டு வந்ததன் மூலம் அந்த மாநிலத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்க போகிறது என்பது குறித்து மோடி பேசி வருகிறார்.

அதில் அவர் “காஷ்மீர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். இதுநாள்வரை இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் பெறும் பல சலுகைகளை காஷ்மீர் மக்கள் பெற முடியாமல் இருந்தது.

இனிமேல் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவி திட்டங்கள் கிடைக்கும்

காஷ்மீரிலிருந்து விளையாட்டு வீரர்கள் உருவாகி உலகெங்கும் சாதனை படைப்பார்கள்.

நிறைய தொழில்நிறுவனங்கள் காஷ்மீரில் உருவாகும். மக்கள் நல்ல வேலைவாய்ப்பையும் தொழில்நுட்பத்தையும் பெறுவார்கள்.

காஷ்மீர் மற்றும் லடாக் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்றப்படும்.

பாதுகாப்பு படைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

சினிமா படபிடிப்புகளுக்கான தடை நீக்கப்படும். அனைத்து மொழி சினிமாக்களையும் இனி காஷ்மீரில் படம் பிடிக்கலாம். திரைப்பட நிறுவனங்களையும் காஷ்மீரில் தொடங்கலாம்.

மூலிகை வகைகளை சந்தைபடுத்தி விவசாயிகளின் வாழ்வு மேம்படுத்தப்படும்.
லடாக்கில் சூழலியல் சுற்றுலா ஊக்கப்படுத்தப்படும்.

காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதத்தை தோற்கடிப்பார்கள். காஷ்மீர் மற்றும் லடாக்கை புதிய பாதையில் அழைத்து செல்வோம்” என்று அவர் பேசியுள்ளார்.