1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (16:15 IST)

மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்ப நடத்துகின்றனர்

transgender marriage
மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்ப நடத்துகின்றனர்
மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பஹிர் என்ற 32 வயது நபருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சங்கீதா என்ற திருநங்கை அவருக்கு அறிமுகமானதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது 
 
இந்த காதலை பஹிர் ரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருடைய மனைவி அவரது காதலை கண்டுபிடித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் இருவரும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்
 
தன் பின் மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்து கொள்ள பஹிர் முடிவு செய்தார். மேலும் மனைவியே இவருக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மனைவியின் ஒப்புதலுடன் இந்த திருமணம் நடந்துள்ளதால் சட்ட சிக்கல் எதுவும்  இல்லை என்று கூறப்படுகிறது ஆனால் இந்த திருமணம் குறித்து பரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது