வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:20 IST)

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகும் கிரிக்கெட் வீராங்கனை: புகைப்படம் வைரல்!

vedha
கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகும் கிரிக்கெட் வீராங்கனை: புகைப்படம் வைரல்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய வீராங்கனை ஒருவர் ரஞ்சித் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மகளிர் இந்திய கிரிக்கெட்அணியில் கடந்த 2011 முதல் 2020 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்
 
இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட் வீரரான அர்ஜுன் என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்ததாகவும் இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது