1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:21 IST)

ஒரே வீட்டில் 15 மனைவிகள், 107 பிள்ளைகளுடன் வாழும் நபர் !

Sagayo Kaluhana
ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் வாழும் ஒரு நபருக்கு 107 பிள்ளைகள் உள்ளனர். இது  பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டேவிட் சாகாயோ கலுஹானா. இவருக்கு 61 வயது ஆகும் நிலையில், இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

இவர் திருமணம் செய்துகொண்ட மனைவிகள் மூலம் 107 பிள்ளைகள் உள்ளனர். அதாவது அந்த கிராமத்தில் இவர் குடும்பத்தில்உள்ளவரே கணிசமாக எண்ணிக்கை ஆகும்.

உலகில் அதிகப் பிள்ளைகள் மற்றும் மனைவிகளுடன் வாழும் டேவிட் பற்றி  பத்திரிக்கைகள், யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகி வரும்   நிலையில், அவர் பலராலும் அறியப்படும் நபராக உள்ளார்.

மேலும், தான் பல பெண்களை திருமணம் செய்தது குறித்து டேவிட் கூறும்போது, பெண்களின் கண்களில் நான் புத்திசாலி நபராக தெரிகிறேன் அதனால் என்னைத் திருமணம் செய்து கொள்கினறனர் எனத் தெரிவித்துள்ளார்.