1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Malayalam actor asks apology for controversial speech

சர்ச்சைக் கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்

மலையாள நடிகர்
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும் என சர்ச்சைக் கருத்தை கூறிய மலையாள நடிகர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலினுள் உள்ளே செல்லலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்புகளையே தெரிவித்து வருகினறனர்.
 
இதுகுறித்து சமீபத்தில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
அவரின் இந்த சர்ச்சைக்கருத்து குறித்து புகார் அளிக்கப்பட்டதால், அவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். 
 
இந்நிலையில் நடிகர் துளசி தான் அவ்வாறு பேசியது தவறு என்றும் தான் கூறிய கருத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்றும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஓடும் ரயில் ரூ.5.78 கோடியை ஸ்கெட்ச் போட்டு திருடியது எப்படி? கொள்ளையர்கள் அசால்ட் வாக்குமூலம்