ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:45 IST)

சின்மயி வெளியிட்ட பாலியல் புகார் - மன்னிப்பு கேட்ட பாடகர்

பாடகி சின்மயி வெளியிட்ட ஒரு பாலியல் புகாரை தொடர்ந்து ஒரு இசையமைப்பாளரும், பாடகரும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பேச தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறையில் உள்ள பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அவரிடம் தெரிவித்து வருகின்றனர். அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
அந்த வகையில், பாடகர் ரகு தீக்சித் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு பெண் சின்மயிடம் கூறியிருந்தார். பாடல் பதிவிற்காக ரெக்கார்டிங் தியேட்டர் சென்றிருந்த போது, தீக்சித் அவரது மனைவி பற்றி தவறாக பேசினார். அதன்பின், என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார் எனக் கூறியிருந்தார். இந்த பதிவை சின்மயியும் வெளியிட்டிருந்தார்.

 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பாடகர் ரகு தீக்சித் “அதற்காக நான் அந்த பெண்ணிடம் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். என் மனைவியை விட்டு பிரிந்திருந்ததால், அவர் என் கதையை கேட்டதும் ஒரு ஆறுதலுக்காக அப்படி செய்துவிட்டேன். ஆனால், என்னை பற்றி சின்மயி கூறும் அனைத்தும் உண்மையில்லை. சின்மயி நல்லவர். அவரை திட்டாதீர்கள். அன்று நடந்த தவறுக்கு இப்போதும் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். பெண்களை வளைத்து பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் நபர் நான் அல்ல. இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.