செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:55 IST)

மோடி வீடு கட்டி தருவாரா? நாங்க கட்டி தரணுமா? – உத்தவ் தாக்கரே கேள்வி!

குடியுரிமை சட்டத்தை மகாராஷ்டிராவில் அனுமதிக்க முடியாது என கூறியுள்ள அம்மாநில முதல்வர் அதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்த நிலையில் பல்வேறு மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்டத்தை மகாராஷ்டிராவில் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகார நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள அவர் ”பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். குடியுரிமை சட்டத்தால் மக்களை வெளியேற்ற முடியாது. ஆனால் தேசிய குடியுரிமை பதிவு இந்து, முஸ்லீம்களையும் பாதிக்கும்.

அண்டை நாட்டு சிறுபான்மை மக்களை பிரதமர் அனுமதித்தால் எந்தெந்த மாநிலங்களில் அவர்களை குடியமர்த்துவார்? மகாராஷ்டிராவில் அவர்கள் எந்த பகுதியில் குடியமர்த்தப்படுவார்கள்? அவர்களுக்கு வீடு பிரதமர் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படுமா? இங்கு இருப்பவர்கள் பலருக்கு ஏற்கனவே வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை” என்று கூறியுள்ளார்.