மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா நிலவரம்!

Corona virus
மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா நிலவரம்!
siva| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:21 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமாக பரவி வருகிறது என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவின் பாதிப்பில் பாதிக்குமேல் மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை சற்று முன் அம்மாநிலத்தில் இன்று ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 56,286 பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

மேலும் இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் அறிவித்துள்ளது இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,29,547 என்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை 5,21,317 என்றும் மொத்தமாக குணமானவர்களின் எண்ணிக்கை 26,49,757 என்றும் இதுவரை மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 57,028 என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :