திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (19:01 IST)

கேரள முதல்வருக்குக் கொரோனா தொற்று உறுதி !

கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கேரள மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 6 வாரங்களாக அதிகரித்துள்ளது

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது கண்ணூர் மாவட்டத்திலுள்ள தர்மடத்தில்  உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்