1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:32 IST)

கடலுக்குள் கர்ணன் பேனர்… அங்க யாருடா பாக்கப்போறா?

கர்ணன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் பாண்டிச்சேரி தனுஷ் ரசிகர்கள் கடலுக்குள் பேனர் வைத்துள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி தனுஷ் ரசிகர்கள் கடலுக்குள் கர்ணன் படத்துக்கான பேனரை வைத்துள்ளனர்.