புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:40 IST)

திண்டுக்கலில் கொரோனா; ஒரு கிராமத்தையே மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திண்டுக்கலில் ஒரு கிராமமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 10 முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் கொரோனா பாதிப்பை பொறுத்து தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைகளையும் அதிகரிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தெருக்கள், வீதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அந்த மொத்த கிராமத்தையே தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்து சீல் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.