கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுகிறது: முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர்!

modi
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுகிறது:
siva| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:14 IST)

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை சற்றுமுன் தொடங்கிய நிலையில் அவர் முதல்வர்வர்களுக்கு சில அறிவுரைகளை கூறி உள்ளார்

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது என்றும் ஆனால் மக்கள் மிகவும் அலட்சியமாக இருக்கின்றனர் என்றும் எனவே கொரோனா அதிகம் பரவும் இடங்களில் அதிக கட்டுப்பாடு வேண்டும் என்றும் அவர் முதல்வர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார்

மேலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நாம் முதல் அலைஒயை மிகவும் வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்றும், ஆனால் தற்போது இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்றும் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நாட்டில் தேவையான அளவு முக கவசம் இருக்கிறது என்றும் அதனை அனைவரையும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் தடுப்பூசியை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு செலுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தும் நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர்களுக்கு ஆலோசனை வழங்கினார்இதில் மேலும் படிக்கவும் :