முடிவுக்கு வந்தது இழுபறி.. நாளை முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்..!
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில், நாளை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு மும்பை ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் தெரிவித்தார்.
இன்று காலை, தேவேந்திர பட்னாவிஸ் பாஜக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் முதல்வராக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று மாலை, தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக பதவியேற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்கிறார்.
மேலும், துணை முதல்வராக அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பதவி ஏற்பார்கள் என்றும், சில அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றது என்பதும், அதனால்தான் அந்த கட்சியிலிருந்து முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran