செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (17:01 IST)

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

uddhav thackeray
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

 ஆனால் இந்த கூட்டணி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், இந்த கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வெளியேறுவதாக செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத், மறுத்துள்ளார்.

இது போன்ற வதந்திகளை யாராவது பரப்பினால் அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். இப்போது சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம். இனி என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 7 நாட்கள் ஆன பின்னரும் இன்னும் முதலமைச்சர் யார் என  பாஜக கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை. பால்தாக்கரே பெயரில் அரசியல் செய்யும் ஷிண்டே, டெல்லியின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறார். நாங்கள் எப்போதும் டெல்லிக்கு சென்று பிச்சை எடுத்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Edited by Siva