காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?
காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா எம்எல்ஏக்கள் திடீரென நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா மாநில தேர்தலில் உத்தவ் தாக்கரே அமைத்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்விக்கு காரணம் காங்கிரஸ் உடனான கூட்டணி தான் என்றும், எனவே காங்கிரஸ் உடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இனியும் தொடரக்கூடாது என்றும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தான் விரைவில் வர உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கூடாது என்று உத்தவ் தாக்கரே இடம் சிவசேனா நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தனித்து போட்டியிட வேண்டும் என்பதே அக்கட்சியின் தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இதற்கு உத்தவ் தாக்கரே என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva