புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் விஸ்வரூபம்: 219 ரன்கள் எடுத்த டெல்லி அணி

Last Updated: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (21:54 IST)
ஐபிஎல் போட்டியில் கடந்த சில போட்டிகளில் டெல்லி அணி மிக மோசமாக விளையாடியது. அந்த அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் காம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றார்

இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணியுடன் மோதிய டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகளில் 93 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஷா 63 ரன்களும், முண்ரோ 33 ரன்களும் அடித்துள்ளனர்.

இந்த நிலையில் வெற்றி பெற 220 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :