திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (20:03 IST)

காஷ்மீர் மசோதாவுடன் முடிந்தது மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்து பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையிலும், இன்று மக்களவையிலும் இதுகுறித்த மசோதா நிறைவேறியது
 
மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 371 வாக்க்குகள் கிடைத்ததால் மசோதா எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிறைவேறியது. இந்த நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் மக்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓ.எம்.பிர்லா அவர்கள் இன்று முறைப்படி அறிவித்தார் 
 
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்குவது ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு மசோதாக்களுக்கும் காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் பாஜக பெரும்பான்மை பெற்று இருப்பதால் எந்தவித பிரச்சனையுமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் திமுக 37 எம்பிக்களை பெற்றிருந்த போதிலும் பாஜகவின் பெரும்பான்மைக்கு எதிராக குரல் கொடுக்க மட்டுமே முடிந்ததே தவிர அந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது