புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (19:18 IST)

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது – காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா

கடும் வாக்குவாதங்கள், எதிர்ப்புகளை தாண்டி காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்த்துகளை நீக்குதல், காஷ்மீரையும், லடாக்கையும் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளடங்கிய மசோதா தற்போது மக்களவையில் வெற்றிக்கரமாக நிறைவேற்றப்பட்டது.

மக்களவை உறுப்பினர்களிடையே மிண்ணனு வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ்மீரிக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.

அதற்கு பிறகு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கான வாக்கு சேகரிப்பு தொடங்கியது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 361 வாக்குகளும், எதிராக 66 வாக்குகளும் கிடைத்தன. ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.