அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!
கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வீட்டில் திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
அந்த வகையில் இன்று திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தனர்
இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லோக் ஆயுக்தா அதிகாரிகளின் சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran