டெல்லியில் நடந்த பணம் கொள்ளை சம்பவத்தில் 2 பேர் கைது!
டெல்லியில் பட்டப்பகலில் சுரங்கப்பாதையில் ஒருவரின் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வழங்குவதற்காக நேற்று ஒரு வாடகை காரில் குருகிராமிற்கு சென்று கொண்டிருந்தார்.
பிரகதி மைதான சுரங்கப்பாதையில் கார் சென்று கொண்டிருக்கும்போது, அந்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், காரை வழிமறித்து, காரில் இருந்த சஜங்குமார் மற்றும் ஓட்டு நரை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது, அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இதற்கு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், முதற்கட்டமாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் மேலும் 2 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீடியோவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.