1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (10:17 IST)

பிரேம்ஜி கதாநாயகனாக நடித்துள்ள சத்தியசோதனை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை.

அதற்கடுத்து அவர் பிரேம்ஜி அமரனைக் கதாநாயகனாக வைத்து அவர் இயக்கியுள்ள சத்யசோதனை என்ற படத்தின் டிரைலர் சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருந்ததால் கூடுதல் கவனம் கிடைத்தது. ஒரு காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க செல்லும் பிரேம்ஜி அமரன் என்ன வகையிலான சிக்கல்களில் எல்லாம் சிக்கிக் கொள்கிறார் என்பது பற்றி நகைச்சுவைக் காட்சிகளோடு டிரைலர் அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21 ஆம் தேதி சத்தியசோதனை திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.