வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (19:30 IST)

இந்தா எதையாச்சும் பண்ணி தொல.... புதிய பிசினஸ் துவங்க கணவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்த நயன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு சில மாதங்களில் வாடகத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் இந்த இரட்டை ஆண் குழந்தைகள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. 
 
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும்  உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளார்கள். அண்மையில் தனது மகன்களுடன் முதலாவது திருமண நாளை நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார்கள். இதனிடையே விக்னேஷ் AK - 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் தற்போது சினிமாவையே விட்டுவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியுள்ளார். 
 
இந்நிலையில் வேலையில்லாமல் இருக்கும் கணவருக்கு கோடி கணக்கில் பணத்தை வாரி கொடுத்து புதிய பிசினஸ் துவங்க கைகொடுத்துள்ளாராம் நயன்தாரா. ஆம், அதாவது கேரளாவில், மிகப்பெரிய அடுக்குமாடி கொண்ட வீட்டினை கட்டவுள்ளாராம். 160க்கும் மேற்பட்ட பிளாட்கள் உள்ள கட்டிடத்தை கட்டவுள்ளார்களாம். அதற்கான வேலையில் விக்னேஷ் சிவன் பார்த்து வருகிறாராம். இருக்கும் பணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை வைத்து அந்த வீட்டை கட்ட பிளான் போட்டுள்ளார்களாம்.