மரத்தை சுற்றி விளையாடிய குழந்தைகள் மின்னல் தாக்கி பலி !

bihar
Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (20:55 IST)
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது, இதனால் அம்மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில்  அம்மாநிலத்தில்  நவாடா என்ற மாவட்டத்திற்கு அருகே உள்ள தன்பூர் கிராமத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு அரச மரத்தைச் சுற்றி  18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
 
அந்த நேரத்தில் மின்னல் தாக்கியது.இதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். 10 குழந்தைகள் கடுகாயமடைந்துள்ளனர்.
 
இந்த தாக்குதல் காயமடைந்த குழந்தைகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விளையாடிய குழந்தைகள் மின்னல்தாக்கி பலியான சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :