1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:59 IST)

எம்.எல்.ஏவை காணவில்லை: பொதுமக்கள் போஸ்டரால் பரபரப்பு

தங்கள் தொகுதி எம்.எல்.ஏவை கடந்த சில நாட்களாக காணவில்லை என தொகுதி மக்கள் போஸ்டர் அடித்து தொகுதி முழுவதும் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி என்ற மாவட்டத்தில் ஹரிவன்ஸ்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கிராமத்தில்  மூளைக்காய்ச்சலால் 7 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த பகுதியை அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் இந்த தொகுதி எம்.எல்.ஏ என யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து அந்த கிராமத்தில் பல்வேறு இடங்களில் தங்கள் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் ஷா அவர்களை காணவில்லை என்று குறிப்பிட்டு கிராமத்தினர் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
 
இதனை கேள்விப்பட்டு பதறிப்போன இந்த தொகுதியின் எம்.எல்.ஏவும் லோக் ஜன சக்தி கட்சியின் பிரமுகருமான  ராஜ்குமார் ஷா உடனே ஹரிவன்ஸ்பூர் கிராமத்திற்கு சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் அவருக்கு எதிராக கிராமத்தினர் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது