திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (10:34 IST)

பதின்பருவ ஈர்ப்பைக் காதல் என நம்பிய சிறுமி - 13 வயதில் வீட்டை விட்டு ஓட்டம் !

கோவை, சின்னியம்பாளையத்தில் 15 வயது பிகார் சிறுவனுடன் 13 வயது சிறுமி வீட்டை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள மில்லில் வேலைப் பார்த்து வருகிறார் அந்த  ராமசாமி எனும் தகப்பன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 13 வயதில் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது )பெண் ஒருவர் உள்ளார். ராமசாமி வேலைப்பார்க்கும் அதே மில்லில் பிகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனும் வேலைப்பார்த்து வருகிறான். இவனுக்கும் அந்த சிறுமிக்கும் எப்படியோ பழக்கமாகி உள்ளது. இந்த பதின் பருவ ஈர்ப்பை இருவரும் காதல் என நம்பியுள்ளனர்.

இதையறிந்த அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக்கொண்ட அந்த சிறுமி நேற்று காலை முதல் அந்த பெண் மாயமாகியுள்ளார்.  சந்தேகப்பட்டு அந்த பீகார் பையனைப் பற்றி விசாரித்ததில் அவனும் காணாமல் போனது தெரியவரவே, இருவரும் ஓடிப் போனது தெளிவானது. இதனை அடுத்து ராமசாமி போலிஸில் புகார் கொடுக்க, விசாரணையில் அந்த சிறுவன் பீகார் செல்ல ரயில் டிக்கெட் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து பீகார் போலிஸுக்குத் தகவல் கொடுத்த தமிழக போலிஸ் அவர்களைப் பீகாரில் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். பதின் பருவ ஈர்ப்பை காதல் என நம்பி இளைஞர்கள் இது போல அவசரப்படுவது அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. இதுபற்றி பதின் பருவத்தினருக்கு முறையான கவுன்சில்ங் தேவையான ஒன்றாக இருக்கிறது.