புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (12:51 IST)

பீகாரில் 125 குழந்தைகள் இறக்க இந்த பழம்தான் காரணமா? அதிர்ச்சி தகவல்

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த வாரங்களில் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காரணம் ஒரு பழம்தான் என்று வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் லிச்சி பழம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என்பதால் லிச்சி பழத்தால்தான் சர்க்கரை அளவு குறைந்திருக்க கூடும் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பீகார் மருத்துவர்கள் சிலர் “லிச்சி பழத்தால்தான் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது என்று அதிகாரபூர்வமான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும் இரவினில் குழந்தைகள் இதுபோன்ற பழங்களை உண்ணுவதை விட உணவு உண்பதே அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்கள்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவியதற்கும் கொய்யா பழத்திற்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.