தொடர்புடைய செய்திகள்
- ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைப்பா?
- வித்யா பாலன் படத்துக்கு அனுமதி மறுத்த வனத்துறை – பின்னணியில் அமைச்சரா?
- நிவர் புயல் எதிரொலி: மூடப்படுகிறது சென்னை விமான நிலையம்!
- கத்தாரில் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: வீசிய தாய் கண்டுபிடிப்பு!
- தடைப்போட்ட வனத்துறை, ரப்பர் பாம்புடன் சென்ற சுசீந்திரன் – ஈஸ்வரனுக்கு அனுமதி
விமான நிலையத்தில் புகுந்த சிறுத்தை… 10 மணி நேர போராட்டத்தில் வனத்துறையினர்!
உத்தரகாண்ட் விமான நிலையத்தில் ஒரு வயதுள்ள பெண் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் ஜாலிகிராண்ட் பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு வனத்தில் இருந்து தப்பி வந்த பெண் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. விமானங்களின் இரைச்சலால் மிரண்ட அந்த சிறுத்தை கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் சென்று பதுங்கியது. சிறுத்தை தப்பி வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்ட நிலையில் அங்கு வந்த அவர்கள் 10 மணி நேரப்போராட்டத்துக்கு பின் அந்த சிறுத்தையை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீருக்காக சிறுத்தை வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
