வித்யா பாலன் படத்துக்கு அனுமதி மறுத்த வனத்துறை – பின்னணியில் அமைச்சரா?
நடிகை வித்யா பாலன் நடித்து வரும் ஷெர்னி என்ற படத்துக்கு வனத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன் தற்போது 'ஷெர்னி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அடர் காடுகளில் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இப்போது திடீரென காட்டுக்குள் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என வனத்துறையின்னர் அறிவித்துள்ளதால் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல், ஏற்பட்டுள்ளது.
திடீரென படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணமாக வித்யா பாலன் வனத்துறை அமைச்சர் விஜய் ஷா அளித்த இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை வனத்துறை மறுத்துள்ளது.