தடைப்போட்ட வனத்துறை, ரப்பர் பாம்புடன் சென்ற சுசீந்திரன் – ஈஸ்வரனுக்கு அனுமதி
சிம்பு நடித்து வெளிவரவுள்ள ஈஸ்வரன் போஸ்டரில் கையில் வைத்திருந்த பாம்பு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் விளக்கமளிக்க ரப்பர் பாம்பை எடுத்து சென்றுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
நடிகர் சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் சிம்பு கையில் வைத்திருந்த பாம்பு உண்மையான பாம்பு என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை தடை செய்ய கோரி வனத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்க கோரி வனத்துறை இயக்குனர் சுசீந்திரனுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து வனத்துறைக்கு விளக்கமளிக்க ரப்பர் பாம்பு மற்றும் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.