’மோடி’ படத்தை கிண்டல் செய்த பிரபல அரசியல் தலைவர் ...

modi
Last Modified புதன், 9 ஜனவரி 2019 (16:34 IST)
மோடியின்  வாழக்கை வரலாறு வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் வேலைகளும் வேகமாய் நடந்து வருகின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு தி ஆக்சிடெண்டல் பிரைம் பினிஸ்டர் என்ற பெயரில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கேர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் மோடியின் வரலாற்று படமான பி.எம். நரேந்திர மோடியில் விவேக் ஓபராய் நடிக்கிறார்.
 
இந்நிலையில் காஸ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தன் டுவிட் செய்துள்ளார். அதில் இந்த போஸ்டர் குறித்து : இதை மோடி என்றால் மோடியே நம்பமாட்டார். என்று கிண்டல் செய்துள்ளார்.
 
அதில் வாழ்க்கை நியாமில்லாதது. அனுபம் கேர் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. மோடி ஜிக்கு சல்மான் கான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாவம் மோடிக்கு விவேக் ஓபராய். என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது கருத்துக்கு ஆதரவுகள் மற்றும் லைக்குகள் குவிந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :