1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Falls Again After Brief Rally; Sensex Down by 135 Points

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குசந்தை
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று பங்குச்சந்தை நன்றாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இன்று ஏமாற்றம் தரும் வகையில் பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 135 புள்ளிகள் சரிந்து, 81,313 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 புள்ளிகள் சரிந்து, 24,725 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இன்ட் வங்கி, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, எல் அண்ட் டி, மாருதி, மகேந்திரா, ஸ்டேட் வங்கி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஸ்ரீராம் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், சிப்லா, பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!